Posts

‘அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது‘

Image
அண்ட பிண்ட ரகசியம்  படித்து பாருங்கள் கரைந்து போவிர்கள் அண்ட பிண்ட ரகசியத்தை சித்தர்கள் எப்படி கண்டறிந்தனர் ? இப்படிப்பட்ட இன்பமும், துன்பமும், ஏற்படுகின்ற இந்த வாழ்க்கைக்கு வழியே இல்லையா? நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்காதா? என்ற கேள்வி எழ ஆரம்பித்தது. எனக்குள்ள அந்தக் கேள்விக்கு மனிதன் கண்டெடுத்த முத்துகளாகிய பிரபஞ்ச அண்ட பிண்டத் தத்துவம்.இன்னும் ஆழமாகப் புரியஆரம்பித்தது. அதன் முடிவு எங்குதோற்றமோ? அங்கேதான் முடியும் ? என்பதை புரிந்து கொண்டேன் ஆராய முற்பட்டேன் அதன் விளைவு வெட்டவெளி தோன்றியது. அதிலிருந்து தோன்றிய ஜோதி என் கண்முன் தோன்றின. அதிலே முளைத்து எழுந்த அணுவே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகி ஓரறிவு ஐந்தறிவு பிராணி ஆறறிவு மனித ஜீவன் வரையுள்ள பரிணாமத்தைக் கண்டேன் கடைசியாகத் தன்னைத்தானே ஆராய முற்பட்டான். அதன் விளைவு தன்னுடைய இடத்திலே இருக்கும் மூல ஆற்றலை உணர்ந்தேன் எங்கோ தொடங்கிய மூல ஆற்றல் அண்டங்களாக பேரண்டங்களாக வியாபித்துள்ள பூரனமாய் நிறைந்துள்ள அந்த ஆற்றலை கண்டேன் பிரபஞ்சத்தின் சிறிய அணுவான மனிதன் மூல சக்தி என்கிற கயிற்றின் நுனியைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபஞ்ச ப...

மூச்சுக்காற்றின் மூல ரகசியங்கள்

Image
 *மூச்சுக்காற்றின் மூல ரகசியங்கள்*  நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது. நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம். படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக்கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும். மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும் அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து ந...

திருமந்திரத்தில் உள்ள பாடல் விளக்க உரை

Image
 திருமந்திரத்தில் உள்ள பிராணாயாமம் பற்றிய பாடல்களின்  விளக்க உரைகள் ஒரே தொகுப்பாக பறவையை விட விரைவாக ஓடக்கூடிய நம் மூச்சுக்காற்றாகிய குதிரையை நம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வோம். அப்படி கட்டுப்படுத்தினால் கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம்பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். இக்கருத்து பிராணாயாமப் பயிற்சி செய்வோர்க்கு சொல்லப்பட்டது. நம்முடைய உயிர், ஐம்பொறிகளுக்கும் இந்த உடலெனும் ஊருக்கும் தலைவன் ஆகும். அந்த உயிர் உய்வு பெற பிராணன் என்ற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்று ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும். நம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை. பதினாறு மாத்திரை அளவு இடது பக்க மூக்கு வழியாக மூச்சை உள்ளே இழுப்பது பூரகம் ஆகும். இழுத்த மூச்சுக் காற்றை அறுபத்தி நான்கு மாத்திரை அளவு உள்ளே நிறுத்தி வைப்பது கும்பகம். வலது பக்க மூக்கு வழியாக முப்பத்தியிரண்டு மாத்...

ஏழு ஆதார சக்கரங்கள்

Image
 மனித இயக்கத்தின்  ஏழு  ஆ தா ர  சக்கரங்கள் 1. மூலாதாரம்   முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. 2. சுவாதிஷ்டானம் இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் ம...

கோயிலுக்குச் செல்லும் பொழுது

Image
 எனதன்பு சொந்தங்களே கோயிலுக்குச் செல்லும் பொழுது  பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் 1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும். 3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது. 4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது. 5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். 6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும். 7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது. 8. கவர்ச்சியான ஆடைகள், ஈரத்துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. 9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு. கோயிலுக்குள் இருக்கும்பொழுது. 10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. 11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு...

ஐந்து பிரகாரங்கள்

Image
  கடவுள்= கட + உள் உன்னில் கடந்து சென்றால் கடவுள் தமிழகத் திருக்கோயில்களில் இருக்கும் ஐந்து பிரகாரங்கள் மூல அமைப்பு போல நம்மிடம் உள்ள உணவு உடம்பு, மூச்சு உடம்பு, மன உடம்பு, அறிவு உடம்பு, இன்ப உடம்பு ஆகியவற்றை கடந்து சென்றால் கடவுளை காணலாம்.  உடல்களை கோஷங்கள் ஆகவும் கூறலாம். உணவு உடம்பு அன்னமயகோசம், மூச்சு உடம்பு பிராணமய கோசம், மன உடம்பு மனோமய கோசம், அறிவு உடம்பு விஞ்ஞான கோசம், இன்ப உடம்பு ஆனந்தமய கோசம். உணவு உடம்பு அல்லது அன்னமயகோசம் இது சரி செய்வதற்கான பயிற்சிகள் உடலைத் தளர்த்தும் பயிற்சிகள் அதாவது ஆசனங்களை செய்ய வேண்டும். கிரியைகளை செய்து உடலின் உட்புறத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது மூச்சு உடம்பு அல்லது பிராண மய கோசம் . முறையான மூச்சுப் பயிற்சிகளை தினமும் செய்யவேண்டும். பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சிகளை செய்து மின்சாரம் போன்ற உயிர் மூச்சை சீர் செய்தல் வேண்டும். மூன்றாவது மன உடம்பு அல்லது மனோமய கோசம் . தினமும் தியானம் செய்ய வேண்டும். கடவுள் மீது செலுத்தும் பக்திக்கும், பற்றுக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டு இயற்கைக்கு மாறான செயல்களை செய்வதை தவிர்க்க வ...

தமிழர்களின் அற்புதங்கள்

Image
பலரும் அறியாத தமிழர்களின் அற்புதங்கள்  1. ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 2. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 3. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4. தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது. 5. கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது. 6. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில்    நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது. 7. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )  8. சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு ச...