ஐந்து பிரகாரங்கள்
கடவுள்= கட + உள் உன்னில் கடந்து சென்றால் கடவுள் தமிழகத் திருக்கோயில்களில் இருக்கும் ஐந்து பிரகாரங்கள் மூல அமைப்பு போல நம்மிடம் உள்ள உணவு உடம்பு, மூச்சு உடம்பு, மன உடம்பு, அறிவு உடம்பு, இன்ப உடம்பு ஆகியவற்றை கடந்து சென்றால் கடவுளை காணலாம்.
உடல்களை கோஷங்கள் ஆகவும் கூறலாம். உணவு உடம்பு அன்னமயகோசம், மூச்சு உடம்பு பிராணமய கோசம், மன உடம்பு மனோமய கோசம், அறிவு உடம்பு விஞ்ஞான கோசம், இன்ப உடம்பு ஆனந்தமய கோசம்.
உணவு உடம்பு அல்லது அன்னமயகோசம் இது சரி செய்வதற்கான பயிற்சிகள் உடலைத் தளர்த்தும் பயிற்சிகள் அதாவது ஆசனங்களை செய்ய வேண்டும். கிரியைகளை செய்து உடலின் உட்புறத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது மூச்சு உடம்பு அல்லது பிராண மய கோசம். முறையான மூச்சுப் பயிற்சிகளை தினமும் செய்யவேண்டும். பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சிகளை செய்து மின்சாரம் போன்ற உயிர் மூச்சை சீர் செய்தல் வேண்டும்.
மூன்றாவது மன உடம்பு அல்லது மனோமய கோசம். தினமும் தியானம் செய்ய வேண்டும். கடவுள் மீது செலுத்தும் பக்திக்கும், பற்றுக்கும், பாசத்திற்கும் கட்டுப்பட்டு இயற்கைக்கு மாறான செயல்களை செய்வதை தவிர்க்க வேண்டும். தினமும் தெய்வ வழிபாடு செய்யலாம். இயமம் நியமம் கடைபிடிக்க வேண்டும்.
நான்காவது அறிவு உடம்பு அல்லது விஞ்ஞானமய கோசம். மெய்யுணர்வு சார்ந்த புத்தகங்களை அதாவது ராமாயணம், மகாபாரதம், பைபிள், திருக்குறள், திருமந்திரம், திருக்குர்ஆன் இதுபோன்ற புத்தகங்களை படிக்க வேண்டும். சத்சங்கங்கள் அடிக்கடி செல்ல வேண்டும் . இவை புத்தியை பலபடுத்தும் சிந்தனா சக்தியை தூண்டும் அறியாமையை விலக்கி நான் என்னும் அகங்காரம் குறையும்.
ஐந்தாவது இன்ப உடம்பு அல்லது ஆனந்தமய கோசம். தியானம் ,யோக நித்திரை போன்ற மனதை பக்குவப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது ஆனந்த கோசத்தை அதாவது இன்ப உடம்பை பேரின்ப பாதைக்கு இட்டுச்செல்லும். இந்த ஐந்து கோசங்களையும் உன்னில் உன் உடலில் உள்ள ஐந்து கோசங்களையும் கடந்து சென்றால் கடவுளை காணலாம். நீயும் கடவுள் ஆக மாறலாம் என்பது மூத்தோர்களின் வாக்கு.
தொலைத்த பொருளை தொலைத்த இடத்தில் தான் தேட வேண்டும் வேறொரு இடத்தில் தேடினால் கிடைக்காது. நம் ஆரோக்கியத்தை எங்கு தொலைத்தோம் அங்குதான் தேட வேண்டும். நம்முடைய உடல் புதையலைப் போன்றது, அற்புதமானது, மதிப்புமிக்கது, அதனால் நம் உடலை பேணி காப்போம்.
நன்றி
வணக்கங்கள் கோடி

Comments
Post a Comment