Posts

Showing posts from July, 2020

சூன்யம் தான் கடவுள்

Image
மனம்   நம்மால் இந்த உலகில் உள்ள எல்லோரையும் சந்தேகப் பட முடியும்...   ஆனால் நாம் நம்முடைய மனதை ஒருபோதும் சந்தேகப் படுவதில்லை... உன்னுடைய மனம் எதையாவது சொல்லும் போதெல்லாம் இரண்டு முறை யோசி...   மனம் உனக்கு மிகவும் நெருக்க மானது...   இடைவெளி மிகவும் சிறியது...   ஆகவே நீ உன்னை அதனோடு அடையாளப் படுத்திக் கொள்கிறாய்... நீ பிறக்கும் போது மனமற்ற ஒரு ஜீவனாகவே பிறந்தாய்...   பிறகு இந்த சமுதாயத்தால் உனக்கு மனம் கொடுக்கப் பட்டது... மனம் அதனுடைய போக்கில் உன்னை தள்ளிக் கொண்டே போகிறது...   உனது இறந்த கால அனுபவங்கள் மனதோடு சேர்ந்து கொள்கின்றன... மனமும் இறந்த காலமும் சேர்ந்து  உன்னுடைய நிகழ் காலத்தை அழித்துக் கொண்டு உள்ளன...   நீ மனமற்ற நிலையை அடையும் போது இறந்த காலம் மறைந்து போகிறது... இறந்த காலமும் எதிர் காலமும் மனதின் பாகங்கள் ...   உன் மனமும் உடம்பும் உன்னுடையது அல்ல... உடலும் மனமும் வெங்காயம் போன்றவைகள்...   உரிக்க உரிக்க முடிவில் ஒன்றுமில்லாத சூன்யம் தான் மிஞ்சும்.. ஓஷோ 

யார் ஞானி

Image
மர்மயோகி அவர்களின் மர்மயோகத்தில் மரணத்திற்க்கு பின்.......                மறுபிறவியில் புதிதாக ஒர் தாயின் கருவறையில் பிறக்காமல், தனியாக ஒரு கூட்டுக்குள் கம்பளி புழு தன் உடலை  புதைத்து கொண்டு எப்படி தன்னை அழகான வண்ணத்துபூச்சியாக மாற்றி வடிவெடுக்கிறதோ அதேபோல் மனிதனாலும் தன் மரணத்தை அவனாலேயே தீர்மானித்து கொள்ள முடியும். ஆதி தமிழ்நெறி மர்மயோகத்தில் பிரபஞ்ச பேறாற்றலின் துணைகொண்டு தன் தேகத்தையே மாற்றி அடுத்த பிறவியில் புது உடலுடன் மர்மயோகிகளாக பிறந்திருக்கிறார்கள்.......                                 ஏன் நம்மால் முடியவில்லை?         கூட்டுக்குள் கம்பளி புழு இருந்ததை போல் நாமும் தியானத்தில் இருக்க பழக்கி இருந்தால் நாமும் அடுத்த பிறவியில் எப்படி வர வேண்டும் என்று நம்மால் தீர்மானிக்க முடியும். ஆனால் கம்பளி புழு கூட்டுக்குள் தியானித்திருந்தது போல்  ஜந்து நிமிடம் கூட நம்மால் தியானத்தில் இருக்க முடிவதில்லையே நமக்குள் இந்த தடையை ஏற்பட...

வாழ்வாங்கு வாழ

Image
  நமக்கு வேண்டியதும் வேண்டாததும்! மனவளக் கட்டுரை! 1. கன மழைக்கு அஞ்சாதீர்கள். மிதமான மழைக்கு ஏங்காதீர்கள். அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள். அதுதான் நல்லது. 2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும்.  வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும். கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம்.  கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார். 3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள். வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல! 4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.  வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்! 5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை. கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமனதாகும்!! 6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட,  கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்! 7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+...

பிரபஞ்ச சக்தி

Image
  பிரபஞ்ச சக்தி என்றால் என்ன ? பிரபஞ்ச சக்தி இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து இருக்கின்றது.இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திலும் உள்ளது. நாம் நம்முடைய செயற்கையான வாழ்கைமுறையின் மூலம் நம்முடைய சக்தியை பெருமளவு இழந்துவிட்டோம்.மீதம் இருப்பது நம்மையும் அறியாமல் நாம் செய்யும் சுவாசத்தின் மூலமும் அவ்வப்போது நாம் செய்யும் தியானம் மற்றும் இறைவழிபாடு மூலமும் தான்.இந்த பிரபஞ்ச சக்தியை பெற வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டுவது தியானம் அல்லது இறைவழிபாடு போன்றவைதான்.இதில் தியானம் என்பது நாம் நினைப்பது போல முற்றும் துறந்த நிலை அல்ல. மாறாக தியானம் என்பது ஒரு சுவாச பயிற்சியே ஆகும்.  நல்ல அமைதியான காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து ரிலாக்ஸாக உங்களுக்கு பிடித்தமான ஒன்றை நினைத்து கொண்டு இருந்தாலெ போதும் உன்கள் உடம்பு தானாக பிரபஞ்ச சக்தியை கிரகிக்க ஆரம்பிக்கும்.ஆனால் நீங்கள் சிந்திக்கும் விஷயம் நேர்மறையாகவும் உங்கல் மனதிற்கு அமைதியை தரகூடியதாகவும் இருக்க வேண்டும். இந்த நிலை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்க கூடியதாகவும் உங்கள் உடம்பை நீங்கள் தள்ளி நின்று மனதளவில் ரசிக்க கூடிய நிலையிலும் இருக்க வேண்டும். ...

அனைத்துமே கடவுள்

Image
🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻 ஆன்மிகம் என்றால் என்ன?                     ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.                     அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.             ...