வாழ்வாங்கு வாழ


 

நமக்கு வேண்டியதும் வேண்டாததும்!

மனவளக் கட்டுரை!

1. கன மழைக்கு அஞ்சாதீர்கள். மிதமான மழைக்கு ஏங்காதீர்கள். அதைவிட நல்ல குடைக்காக மட்டும் வேண்டுங்கள். அதுதான் நல்லது.

2. வெள்ளம் வரும்போது மீன்கள் எறும்புகளை உட்கொள்ளும்.  வெள்ளம் வடிந்த பிறகு எறும்புகள் மீன்களைத் திண்ணும். கால நேரம்தான் அனைத்திற்கும் காரணம்.  கடவுள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பார்.

3. நாடகங்களுக்கு செல்லும் போது முன் வரிசையில் உட்கார இடம் கிடைத்தால் பரவாயில்லை என்பீர்கள். திரைப்படங்களுக்குச் செல்லும்போது, கடைசி வரிசைக்கு அடிபோடுவீர்கள். வாழ்க்கையில் நிலைப்பாடு ஒவ்வொன்றும் தொடர்புடையது. நிலையானது அல்ல!

4. சோப்பு உற்பத்திக்கு எண்ணெய் தேவை. எண்ணெயைப் போக்குவதற்கு சோப்பு தேவை.  வாழ்க்கையின் இரட்டை நிலைப்பாடு இதுதான்!

5. சரியான ஆசாமியைத் தேர்ந்தெடுப்பது முக்கியமில்லை. கிடைத்த ஆசாமியை சரியாகக் கையாள்வதுதான் முக்கியமனதாகும்!!

6. ஆரம்பத்தில் எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதைவிட,  கடைசி வரை தொடர்ந்து எத்தனை கவனமாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியமாகும்!

7. ஒவ்வொரு பிரச்சினைக்கும் (N+1) என்பதுதான் தீர்வு. இதில் N என்பது எத்தனை தீர்வுகளை நீங்கள் முயற்சித்தீர்கள் என்பதைக் குறிக்கும். 1 என்பது நீங்கள் முயற்சிக்காத தீர்வுகளைக் குறிக்கும்

8. நீங்கள் பிரச்சினையில் இருக்கும்போது,  அதுதான் முடிவாக இருக்குமோ என்று எண்ணாதீர்கள். அது வாழ்க்கையில் ஒரு வளைவான இடம் அவ்வளவுதான்!

9. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள வேறுபாடு கடவுள் கொடுக்கிறார், கொடுக்கிறார்,  விட்டும் கொடுக்கிறார்.  மன்னித்தும் விடுகிறார். ஆனால் மனிதன் பெறுகிறான், பெறுகிறான். காரியம் முடிந்தவுடன் கடைசியில் கடவுளையே மறந்துவிடுகிறான்!

10. இரண்டுவிதமான மக்கள்தான் எப்போதும் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் ( பைத்தியக் காரர்களும் ) குழந்தைகளுமாவார்கள். உங்கள் லட்சியங்களை அடைய பைத்தியக் காரகளைப் போல் இருங்கள். அடைந்தபின் குழந்தைகளைப் போல மகிழ்ச்சியடையுங்கள்.

11. மற்றவர்களுடைய உணர்வுகளோடு விளையாடாதீர்கள். நீங்கள் வெற்றி அடையலாம். ஆனால் அந்த மனிதரை நீங்கள் இழக்க நேரிடும்

12. வெற்றிக்கு எஸ்கலேட்டர், லிப்ஃட் எல்லாம் கிடையாது. படிகள் மட்டும்தான் உண்டு!

         வாழ்வாங்கு வாழ வழி நாம் வாழும் காலத்தில் உடலையும் மனதையும் சரிப்படுத்திக் கொண்டால் நமக்கு பின்னாலே பிறக்கக்கூடிய குழந்தைகளில் எப்படி இருக்கும் என்று பார்த்தீர்கள் ஆனால் அவை ஆரோக்கியமான கட்டமைப்பை கொண்டதாக திகழும் அவ்வாறு நல்ல குழந்தைகளை உலகுக்கு தருவதற்கு நமது உடற்பயிற்சி தியான முறை இரண்டுமே வாய்ப்பளிக்கும் வேலைப்பளு அதிகரிக்கும்போது ஊதியம் தராத உடற்பயிற்சி தியானம் இவற்றை முதலில் நிறுத்திவிடலாம் என்று எண்ணாது உள்ளூர இயங்கிவரும் இறைசக்திக்கு  தொண்டு செய்யும் வகையிலே உடற்பயிற்சி உடற்பயிற்சியின் செய்து நாளுக்கு நாள் மகிழ்ச்சியும் இனிமையும் பெற்று வாழ வேண்டும்.
 
படித்ததில் கவர்ந்தது, மொழியாக்கம் செய்து பதிவிட்டுள்ளேன்.
 

Comments

Popular posts from this blog

96 தத்துவங்கள்

திருமந்திரத்தில் உள்ள பாடல் விளக்க உரை

சூரிய கலை சந்திர கலை