யார் ஞானி
மர்மயோகி அவர்களின் மர்மயோகத்தில் மரணத்திற்க்கு பின்.......
ஆதி தமிழ்நெறி மர்மயோகத்தில் பிரபஞ்ச பேறாற்றலின் துணைகொண்டு தன் தேகத்தையே மாற்றி அடுத்த பிறவியில் புது உடலுடன் மர்மயோகிகளாக பிறந்திருக்கிறார்கள்.......
ஏன் நம்மால் முடியவில்லை?
கூட்டுக்குள் கம்பளி புழு இருந்ததை போல் நாமும் தியானத்தில் இருக்க பழக்கி இருந்தால் நாமும் அடுத்த பிறவியில் எப்படி வர வேண்டும் என்று நம்மால் தீர்மானிக்க முடியும். ஆனால் கம்பளி புழு கூட்டுக்குள் தியானித்திருந்தது போல் ஜந்து நிமிடம் கூட நம்மால் தியானத்தில் இருக்க முடிவதில்லையே நமக்குள் இந்த தடையை ஏற்படுத்தியது எது? அதுதான் மனம் என்னும் "எமன்" அந்த எமனையே நிற்க வைத்து கேள்வி கேட்ட "நசிகேதனுக்கு" மட்டுமே மூன்று கேள்விகளுக்கு வாய்ப்பு கொடுக்கபட்டது. அதில் முதல் கேள்விக்கு மட்டுமே நேரடியாக பதில் கிடைத்தது மற்ற இரண்டு கேள்விகளுக்கு வாய்வழி செய்தியாகவும் காதோடு காது வைத்து ஒதிய இரகசிய மந்திரம் தான் இதை நசிகேதனால் சுவடுகளாக எழுதபட்டது என்பதே யாரும் அறிந்திராத இரகசியம் அதை நாளந்தா பல்கலைகழக நூலகத்தில் பாதுகாக்கபட்டதும் பின் நூலகம் தீய்க்கிரையில் அதுவும் கரியானது என்பதும் இரகசியமே.........
எமனிடம் நசிகேதன் கேட்ட மூன்று கேள்விகள்:-
(1)உலகத்திலேயே மிக. பெரிய இரகசியம் எது? பதில்:- உலகத்தில் அனைவரும் சாகும் போது நான் மட்டும் சாகமாட்டேன் என்று பொய்யாக நினைப்பதுதான் மிக பெரிய அதிசயம்.
(2)இறந்த பின் மனிதன் என்னவாகிறான்?
பதில்:- இதற்க்கு எமன் பதில் சொல்ல மறுக்கிறான் நசிகேதன் கெஞ்சி கேட்க்கும் பொழுது வாய்வழி செய்தியாக சைகைகளில் சொல்லுகிறான்.
(3)மறுபடியும் ஏன் பிறக்க நினைக்கிறான்?
பதில்:- இதற்க்கு நசிகேதன் காதோடு காதாக மந்திரமாய் ஓதுகிறான்...........
இந்த இரகசியம் மர்மயோகத்தில் மர்மமாகவே இருக்கிறது இந்த மர்மத்தை உடைக்கத்தான் ஆதி தமிழ் நெறி மர்ம யோக பயிற்சிகள்...........
முதலில் மனதை பற்றி மர்யோகத்தில் ..........
ஓர் அனுபவத்தில் மனம், நிலை கொள்ள முடியாது.. வெறுமனே இருக்கும் அனுபவத்தை மாற்றவே மனம் துடிக்கும்.. கடவுள் என்ற பேர் அதிசயம் நம் முன்னால் தோன்றினாலும் அதிலேயேயும் நாம் மாற்றம் காணவே மனம் துடிக்கும்.. அப்படிதான் எல்லையில்லா வானம் தன் பேர் அதிசயத்தை இழந்து நிற்கின்றது.. அதோடு உடன் இருக்கும் எல்லையில்லா வெற்றிடம் மனித மனதிற்கு எந்த பிரமிப்பையும் தர வில்லை.. அந்த அண்ட பேர் அதிசயத்திற்கு மாற்றாய் அற்ப அதிசயங்களை காணவே பெரும்பான்மை மனித மனம் துடிக்கின்றது.. உண்மையை என்றும் மனம் ஏற்பதில்லை.. மாற்றாய் பொய்யை பொய் என நன்கு தெரிந்தும் பொய்யையும் பொய்யை தாங்கிய கவர்ச்சியையும் தான் மனித மனம் விரும்பும்.. இதற்கு மிக உண்மையான காரணம் உண்டு.. ஒரு அனுபவம் கிடைத்த உடன் அதிலே மனம் விரைவாக வாழ்ந்து முடித்து விடுகிறது.. முடித்து விடுகிறது என்பது தான் மிக முக்கியம்.. மீண்டும் ஒரு புது வாழ்வு வாழ விரும்பும் மனம் புது அனுபவத்தை தேடுகிறது.. உண்மை என்ற வாழ்வை விரைவாக வாழ்ந்து முடித்த பின் பொய்யான வாழ்வு கிடைத்தாலும் மனதிற்கு சமாதானமே.. மனம் எதையாவதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இல்லையேல் எதிர்பார்ப்புகளுக்கு இரை கிடைக்காமல் மனம் வேதனைதான் படும்.....................
இதை இன்னும் சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால்.............
சிறப்பு பொருந்திய ஒன்று, வேறு படும் மனித மன நிலைக்கு தகுந்தால் போல் தன் சிறப்பினை வெளிப் படுத்தும் போது மட்டுமே மனம் அந்த சிறப்பினை உணர்வதும் பின் அதிலிருந்து பலனை பெறுவதும் ஒரு பக்கமாக இருக்க, மீண்டும் அதே சிறப்பு என்ற அதிசயம் வெளிப் படும் போது, மனம் அதை சிறப்பு நிலையில் வைப்பதில்லை.. முதலில் இருந்த உணர்வு இரண்டாம் முறை வெளிப் படும் போது துளியும் இருப்பதில்லை.. காரணம் முதல் முறையிலேயே மனம் வாழ்ந்து முடித்து விட்டது.. மீண்டும் அதனோடு வாழ மனம் தயாராக இல்லை.. அது எப்படிதான் சிறப்பாக இருந்தாலும் பேர் அதிசயமாக இருந்தாலும், அது எந்த வித தாக்கத்தையும் மனதிற்கு உருவாக்குவதில்லை.. இதில் கவனிக்க வேண்டிய ஒன்று தாக்கத்தை ஏற்படுத்தாத குற்றம் அந்த சிறப்பான பேர் அதிசயத்திற்கு இல்லை.. அற்ப மனித மனத்திற்கு தான் உண்டு.. எந்த கவிஞரும் ஞானியும் அந்த பொலிவு இழந்த அற்புதத்தை மீண்டும் எப்படியெல்லாம் எடுத்துரைத்தாலும் மனித மனம் துளியும் அந்த அற்புதத்தை பற்றவே பற்றாது.. உண்மை இப்படி ஒரு புறம் இருக்க மனித மனத்திற்கு இரை (உணவு) ஊட்டும் வண்ணம் பொய்மையை உருவாக்கி, அதில் முடிந்த மட்டும் கற்பனை திறனை திறம் பட கலந்து பொய்யே நிறைந்த சூழலை முற்றிலுமாக உருவாக்கி விட்டது.. இதனை அறிந்தவன் தெளிந்தான்
மீண்டும் மீண்டும் அற்புதத்திற்காக ஏங்கி பொய்மையில் விழாமல், பொலிவு இழந்த அந்த பேர் உண்மையாய் என்றும் திகழும் அந்த ஒன்றை இறுக பற்றிக் கொண்டு, அதற்கு பொலிவு,சிறப்பு கூட்டி அதனோடு உடன் பட்டு இயங்கி, வீடுபேற்றை நல்விதமாய் பெறுதல்.. இதற்கு தமிழ் நெறி மட்டுமே உதவுகிறது.. அந்நெறியாளரே தமிழ் ஞானியர் ஆவர்.. தமிழ் ஞானியர் மட்டுமே உண்மை ஞானிகள்..
யார் ஞானி என்பதை மிக சுலபமாக அறிந்து கொள்ளலாம்.. அவர் பொலிவு இழந்த பேர் உண்மையை சார்ந்து இருக்கின்றாரா அல்லது ஆரிய பொய்மையில் இருக்கின்றாரா என்பதை அவர் வாய் சொல்லில் இருந்து சில நிமிடங்களிலேயே அறிந்து கொள்ளலாம்..
தமிழ் நெறியோ முற்றிலும் முழுக்க முழுக்க ஞான, தெளிவு நிலையை மட்டுமே பின்பற்றுகிறது.. அதனால் தான் மதத்தின் கவர்ச்சிக்கு முன்னால் அது தோற்றுப் போய் நிற்கிறது.. தெளிவில்லாத மதங்களுக்கு முன்னால் அது தலை நிமிர முடியவில்லை..
தமிழ் நெறி ஆதியில் திருவடி தீட்கையில் அந்த பொலிவு இழந்த நித்திய நிரந்தர பேர் உண்மைக்கு பொலிவு ஊட்ட முனைந்து தோற்றுப் போய் விட்டது.. இன்றைய பொய்மை பெரு வெள்ளத்திற்கு முன் அது தாக்கு பிடிக்காமல் போய் விட்டது.. பொய்மையிலிருந்து விடுபட்டவர்கள்தான் திருவடி உண்மையை வெளிப்படுத்தும் உண்மை அடியார்கள்..
அந்த உண்மை பேர் உண்மைகளில் தலையாய் இருப்பது இந்த வெற்றிடம் தான்.. வெறும் வெற்றிடம் மட்டும் அல்ல சுத்த அதி தீவிர அருள் வெளியும் கூட.. இதில் அதி தீவிரமான அருள் ஆற்றலை உணர தவறினால் மன ஆதிக்கத்திற்கு அடிமையாக வேண்டியதுதான்.. சுத்த அதி தீவிர அருள் ஆற்றலோடு உடன் பட, மனம் உண்மையை உணரத் தொடங்கும்.. எல்லாம் சீர் அடையும்.
"அன்பே சிவம்"
Comments
Post a Comment