Posts

Showing posts from October, 2020

தமிழர்களின் அற்புதங்கள்

Image
பலரும் அறியாத தமிழர்களின் அற்புதங்கள்  1. ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது. 2. திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது. 3. தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது. 4. தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது. 5. கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது. 6. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே  கோட்டையூரில்    நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது. 7. சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை )  8. சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு ச...

திருவண்ணாமலை

Image
திருவண்ணாமலை பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.  இங்கு மலையே "இறைவனின் சொரூபமாக" விளங்குகிறது.  மலையே சிவலிங்கமாக காட்சியளிக்கிறது.  வல்லாள மன்னனுக்கு மகனாக  இறைவன் அவதரித்த தலமாகவும் விளங்குகிறது.  அன்னை பார்வதி தேவிக்கு இறைவன் தன்னுடைய  இடப்பாகத்தை அளித்த  தலமாகவும் விளங்குகிறது.    நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குகிறது.  அருணகிரிநாதர்,  பகவான் ரமண மகரிஷி, பகவான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் குகை நமச்சிவாயர், பகவான் யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள் ஆகியோர் அருள் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.  இங்கு உள்ள ராஜ கோபுரம் 217 அடி கொண்டதாகும்.  அண்ணாமலையார் திருக்கோயில் 24 ஏக்கர் கொண்டதாகும்.  நவ கோபுரங்களையும், ஏழு பிரகாரங்களையும் கொண்டது.  இங்கு உள்ள கிரிவலம் உலகப் புகழ் பெற்றது.  விசுவாமித்திரர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், அகத்தியர் மாமுனிவர்,  சனந்தனர் முதலானோர் இறைவன் அண்ணாமலையாரை வந்து வழிபட்டுள்ளனர்.  கார்த்திகை மாத தீப பெருவிழா இத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெ...

இந்து தர்ம சாஸ்திரம்

Image
இந்து தர்ம சாஸ்திரம் 1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு; 2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; 3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; 4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும். 5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம். 6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும். 7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும். 8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும். 9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.  10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. 11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.  12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது. 13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது. 14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது. 15. கிழக்கு,...

புருவ மத்தியில் தியானம்

Image
 புருவ மத்தி என்பது எது? ஆன்மீகத்தில் சிறிது நாட்டம் உள்ளவர்களிடம் தியானம் நாம் எங்கு செய்ய வேண்டும் என்று கேட்டால் கூறுவது மனதை புருவ மத்தியில் நிலை நிறுத்துங்கள் என்று கூறுவர். சித்தர்களும், ஞானிகளும் இதையே தான் “புருவ மத்தியில் தியானம் செய்யுங்கள் என்று தான் கூறுகின்றனர் “. புருவமத்தி எது என்று சாதரணமாக யாரிடம் கேட்டாலும்  “புருவமத்தி” என்று நாம் நெற்றியில் பொட்டு வைக்கும் இடத்தை கூறுவர். இன்று பல யோகா மையங்களும் இதையே தான் கூறுகிறது. புருவமத்தி என்றால் பொட்டு வைக்கும் இடமா என்றால் அது தான் இல்லை? சிறிது சிந்தித்து பார்த்தல் இது புலப்படும். அதற்கு முன் அவ்வை பிராட்டி நமக்கு கூறும் இந்த பாடலை நினைவில் கொள்ளுங்கள் ”            “தேவர் குறளும் திருநான் மறை முடிபும்             மூவர் தமிழும் முனி மொழியும் – கோவை             திருவாசகமும் திருமூலர் சொல்லும்             ஒரு வாசகம் என்று உணர்” திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகத்தியர் முதலான சித்தர் பாடல்கள் தி...

குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்

Image
 *உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்* ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது. இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். 1. அசுவினி : செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர். 2. பரணி : நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர். 3. கார்த்திகை : பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர். 4. ரோகிணி : கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர். 5. மிருகசீரிடம் : தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம். 6. திருவாதிரை : எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர். 7. புனர்பூசம் : கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம். 8. பூசம் : பிறரை மதிப்...