திருவண்ணாமலை

திருவண்ணாமலை
பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு மலையே "இறைவனின் சொரூபமாக" விளங்குகிறது.
மலையே சிவலிங்கமாக காட்சியளிக்கிறது.
வல்லாள மன்னனுக்கு மகனாக இறைவன் அவதரித்த தலமாகவும் விளங்குகிறது.
அன்னை பார்வதி தேவிக்கு இறைவன் தன்னுடைய இடப்பாகத்தை அளித்த தலமாகவும் விளங்குகிறது.
நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்குகிறது.
அருணகிரிநாதர், பகவான் ரமண மகரிஷி, பகவான் சேஷாத்திரி சுவாமிகள், பகவான் குகை நமச்சிவாயர், பகவான் யோகி ராம்சுரத்குமார் சுவாமிகள் ஆகியோர் அருள் பெற்ற தலமாகவும் விளங்குகிறது.
இங்கு உள்ள ராஜ கோபுரம் 217 அடி கொண்டதாகும்.
அண்ணாமலையார் திருக்கோயில் 24 ஏக்கர் கொண்டதாகும்.
நவ கோபுரங்களையும், ஏழு பிரகாரங்களையும் கொண்டது.
இங்கு உள்ள கிரிவலம் உலகப் புகழ் பெற்றது.
விசுவாமித்திரர், பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர், அகத்தியர் மாமுனிவர், சனந்தனர் முதலானோர் இறைவன் அண்ணாமலையாரை வந்து வழிபட்டுள்ளனர்.
கார்த்திகை மாத தீப பெருவிழா இத்தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது.
சமயகுரவர் நால்வராலும் பாடப்பெற்ற நான்கு தலங்களில் அண்ணாமலையார் திருக்கோவிலும் ஒன்று ஆகும்.
இப்படி பல சிறப்புகளையும், உலகப் புகழ் பெற்ற ஆலயமாகவும் இருக்கும் இத்தலத்திற்கு அடியேனை 100 தடவைக்கு மேல், வரவழைத்த "எம்பெருமான்", "உலகத்தின் முதல்வன்" அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்பாளுக்கும் கோடான கோடி நன்றி.
சிவாயநம.
திருசிற்றம்பலம்.
ஈசன்அடிமை நான்.
எந்த பிறவியிலும் அண்ணாமலையாரின் அடிமை...!

Comments
Post a Comment