குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்

 *உங்கள் குணத்தை சொல்லும் நட்சத்திரங்கள்*

ஒவ்வொருவர் நட்சத்திரங்கள் அடிப்படையில் அவரவர் குணநலன்கள் அமைந்துள்ளது.

இதோ 27 நட்சத்திரக்காரர்களின் குண நலன்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

1. அசுவினி : செல்வந்தர், புத்திசாலி, விவாதம் செய்பவர், ஆடம்பர பிரியர், பக்திமான், கல்விமான், பிறருக்கு அறிவுரை சொல்பவர்.

2. பரணி : நன்றி மிக்கவர், திறமைசாலி, தர்மவான், எதிரிகளை வெல்பவர், அதிர்ஷ்டசாலி, சாதிப்பதில் வல்லவர், வசதியாக வாழ்பவர்.

3. கார்த்திகை : பக்திமான், மென்மையானவர், செல்வந்தர், கல்வி சுமார், வாழ்க்கைத்தகுதி அதிகம், பழகுவதில் பண்பாளர்.

4. ரோகிணி : கம்பீரவான், உல்லாசப்பிரியர், கலாரசிகர், ஊர் சுற்றுபவர், செல்வாக்கு மிக்கவர், வசீகரமானவர்.

5. மிருகசீரிடம் : தைரியசாலி, முன்கோபி, தர்மவான், புத்திசாலி, திறமை மிக்கவர், செல்வம் சேர்ப்பதில் ஆர்வம்.

6. திருவாதிரை : எளிமை, சாமர்த்தியசாலி, திட்டமிட்டுப்பணி செய்பவர், விவாதத்தில் வல்லவர், சுபநிகழ்ச்சிக்கு தலைமையேற்பவர்.

7. புனர்பூசம் : கல்விமான், சாதுர்யப் பேச்சு, ஊர்சுற்றுவதில் ஆர்வம், நன்றிமிக்கவர், ஆடம்பரத்தில் நாட்டம்.

8. பூசம் : பிறரை மதிப்பவர், பக்தியில் நாட்டம், வைராக்கியம் மிக்கவர், நண்பர்களை நேசிப்பவர், புகழ்மிக்கவர், மென்மையானவர்.

9. ஆயில்யம் : செல்வந்தர், தர்மவான், செலவாளி, ஆடம்பரப்பிரியர், சத்தியவான், நேர்மை மிக்கவர்.

10. மகம் : ஆராய்ச்சி மனப்பான்மை, கல்வியில் ஆர்வம், தர்மவான், பழக இனிமையானவர், நேர்மையாக நடக்க விரும்புபவர்.

11. பூரம் : ஒழுக்கமானவர், புத்திசாலி, விவசாயம், வியாபாரத்தில் ஆர்வம், உண்மையானவர், செல்வாக்கு, பேச்சுத்திறன் மிக்கவர்.

12. உத்திரம் : நாணயமானவர், பக்திமான், நட்புடன் பழகுபவர், நன்றி மறவாதவர், சுகபோகி, உறவினர்களை நேசிப்பவர்.

13. அஸ்தம் : ஆடை, ஆபரண பிரியர், கல்வியில் ஆர்வம், கலாரசிகர், நகைச்சுவையாகப் பேசுபவர், தாய்மீது பாசம் கொண்டவர், பழக இனியவர்.

14. சித்திரை : ஊர் சுற்றுவதில் ஆர்வம், கல்விமான், தைரியசாலி, எதிரிமீதும் இரக்கம், சாதிப்பதில் வல்லவர், பரந்த உள்ளம் கொண்டவர்.

15. சுவாதி : புத்திகூர்மையானவர், யோசித்து செயல்படுபவர், சுகபோகி, பழக இனியவர், நம்பகமானவர், யோகம் மிக்கவர்.

16. விசாகம் : வியாபார ஆர்வம், சாமர்த்தியசாலி,கலா ரசிகர், தர்மவான், சுறுசுறுப்பானவர், தற்பெருமை கொண்டவர்.

17. அனுஷம் : நேர்மையானவர், அந்தஸ்து மிக்கவர், அமைதியானவர், ஊர் சுற்றுவதில் ஆர்வம், அரசால் பாராட்டு பெறுபவர்.

18. கேட்டை : கல்வியில் ஆர்வம், துணிச்சலானவர், குறும்பு செய்வதில் வல்லவர், முன்கோபி, சாமர்த்தியசாலி,புகழ் மிக்கவர்.

19. மூலம் : சுறுசுறுப்பானவர், கல்வியாளர், உடல்பலம்மிக்கவர், நீதிமான், புகழ்விரும்பி, அடக்கமிக்கவர்.

20. பூராடம் : சுகபோகி, செல்வாக்குமிக்கவர், பிடிவாதக்காரர், வாக்குவாதத்தில் வல்லவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

21. உத்திராடம் : தைரியசாலி, கலையில் ஆர்வம், பொறுமைசாலி, நினைத்ததை சாதிப்பவர், சாதுர்யமாகப் பேசுபவர்.

22. திருவோணம் : பக்திமான், சமூகசேவகர், சொத்துசுகம் கொண்டவர், பிறரை மதிப்பவர், உதவுவதில் வல்லவர்.

23. அவிட்டம் : கம்பீரமானவர், செல்வாக்கு மிக்கவர், தைரியசாலி, முன்கோபி, மனைவியை நேசிப்பவர், கடமையில் ஆர்வம் கொண்டவர்.

24. சதயம் : வசீகரமானவர், செல்வந்தர், பொறுமைசாலி, முன்யோசனை கொண்டவர், திறமையாக செயல்படுபவர், ஒழுக்கமானவர்.

25. பூரட்டாதி : மன திடமானவர், பலசாலி, சுகபோகி, பழக இனியவர், தொழிலில் ஆர்வம் மிக்கவர், குடும்பத்தை நேசிப்பவர்.

26. உத்திரட்டாதி : கல்வியாளர், சாதுர்யமாகப் பேசுபவர், ஆபரணபிரியர், பக்திமான், கடமையில் ஆர்வம் மிக்கவர்.

27. ரேவதி : தைரியசாலி, நேர்மையானவர், எதிரியை வெல்பவர், சுகபோகத்தில் நாட்டம், தற்புகழ்ச்சி விரும்புபவர், பழக இனியவர்.

நட்சத்திர குண நலன்களுடன் நமது குணங்களைப்பொருத்திப் பார்ப்போம். ஏதேனும் நல்ல குணங்கள் குறைந்திருந்தால் அதை நிறைவு செய்து மேம்படுவோம்.

* Stars who tell your character *

Each is based on his or her characteristics based on the stars.

Here is what you can learn from the 27 stars.

1. Ashvini : Rich, intelligent, debater, luxury lover, pious, educated, advising others.

2. Parani : Grateful, talented, virtuous, overcomes enemies, lucky, accomplished, lives comfortably.

3. Karthika: Devout, gentle, wealthy, educated, high quality of life, well-mannered.

4. Rohini: majestic, fun-loving, artisan, touring, influential, charming.

5. Mirukaciritam Zodiac: Brave, angry, virtuous, intelligent, talented, interested in amassing wealth.

6. Thiruvathirai: Simplicity, ingenuity, planning, discussion, leadership of euphoria.

7. Punarpusam: Educated, tactful, interested in flirting, grateful, pursuit of luxury.

8. Poosam: Respecting others, devotional, zealous, loving friends, glorious, gentle.

9. Ayilyam: Wealthy, Dharmavan, Expensive, Luxurious, Truthful, Honest.

10. Magam: Research minded, interested in education, Dharmavan, pleasant to associate with, wants to walk honestly.

11. Pooram: Decent, intelligent, agricultural, interested in business, genuine, influential, eloquent.

12. Uttiram: genuine, devotional, friendly, grateful, comfortable, loving relatives.

13. Hastham: Clothing and jewelry lover, interested in education, art lover, joker, affectionate mother, sweetheart.

14. Chithirai: Interested in traveling around the city, educated, brave, compassionate against the enemy, accomplished, broad-minded.

15. Swati: Intelligent, thoughtful, comfortable, sociable, trustworthy, Lucky.

16. Visagam: Business enthusiast, talented, art lover, charismatic, energetic, proud.

17. Anusham: Honest, dignified, peaceful, interested in traveling, appreciated by the government.

18. Kettai: Interested in education, brave, naughty, grumpy, talented, famous.

19. Moolam: Acttive, Educated, Physical, Righteous, Glorious, Humble.

20. Pooradam: Comfortable, influential, stubborn, argumentative, interested in duty.

21. Uttiradam: Courageous, passionate about art, patient, accomplishing what is thought, tactful.

22. Thiruvonam: Devout, social worker, wealthy, respectful and helpful.

23. Avittam: majestic, influential, brave, angry, loving wife, passionate about duty.

24. Satyam: Charming, wealthy, patient, thoughtful, efficient and disciplined.

25. Purattadi: Strong-minded, strong, comfortable, sociable, passionate about business, loves family.

26. Uttaratadi: Educator, eloquent speaker, jeweler, devotee, interested in duty.

27. Revathi: Courageous, honest, conquering the enemy, prone to pleasures, flattering, sociable.

Let’s match our qualities with stellar qualities. If any good qualities are lacking we will complete it and improve.


Comments

Popular posts from this blog

96 தத்துவங்கள்

திருமந்திரத்தில் உள்ள பாடல் விளக்க உரை

சூரிய கலை சந்திர கலை