குண்டலினி சக்தி
குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!!
அத்தனிமத்தின் பெயர் வெண்பாஸ்பரஸ். இந்த வெண்பாஸ்பரஸ் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது.
அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும்.
நம் உடலின் வெப்பத்தை உண்மையில் மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது. அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது.
அங்கே உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அது வினைபுரியும் தனிமத்தின் பெயர்
ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கை குணமே வெடிப்பதாகும். எனவே வெப்பநிலை மேலும் அதிகரித்து அனாகதத்தை அடைகின்றது.
அனாகதத்தில் உள்ள தனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம் சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்த ஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன் எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.
எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்து விசுத்தியை அடைகின்றது. ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ள தனிமத்தின் பெயராகும். இங்கேயும் வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும் நிகழ்ந்து மேலேறுகின்றது.
அடுத்ததாக உள்ள சக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்த நைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலே எழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும், அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும், ஒரு குருவின் பெருமைகளை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
அவருக்கு நிகர் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள் அனுபவத்திற்கு வரும்போது நன்கு விளங்கும் என்றும் கூறப்படுகிறது.
"சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவே
தரம் பார்த் துன்னை
பரம் ஆக்கிடு வான்"
ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல் திறந்தலே வெற்றிட பூஜ்ஜிய
பிரமநிலையாகும்.
பிரமநிலைக்கு .........மணிபூரக சக்கரம் விழிப்படைதலே காரணம்.
பக்தி நிலைக்கு...... அனாகத சக்கரம் விழிப்படைதலும்,
முக்தி நிலைக்கு .....சகஸ்ராரம் விழிப்படைதலும்,
யோக நிலைக்கு .....சுவாதிஷ்டானமும்,
ஞானத்தேடலுக்கு..... மூலாதாரம் விழிப்படைதலும் காரணமாகும்.
நாதத்தின் மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்கு.......விசுத்தி விழிப்படைதலே காரணமாகும்.
மேலும் நாம் தியானத்தில் அமரும் போது குண்டலினியானது புருவமத்தி அல்லது......சகஸ்ராரத்திலும்,
தூங்கும் போது.......விசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும் விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).
குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய் விழிப்படையும்.
இதில் உடலில் மாறுபாடாக அடையாளமாக காண்பது விந்தின் வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ள மூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்து வெம்மையானது நெருப்பாறாக மாறி வரிவரியாக தடம் இருக்கும்.
மேலும் உடலில் நிரந்தரமாக காணப்படும் அடையாளமாக புருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ் விந்தின் வெம்மையால் ........ஒரு பிறைவடிவ "U" நாமத்தடம் விழும்.
இத்தடமானது இப்பூமியில் உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத் தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாக நெருப்பாற்றின் தடத்தினையும் காணலாம்.
சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின் வழியாக அமிர்தமானது பிறை வடிவ நாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன் வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்று பின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்தி சென்று உறைவிடமாய் கொள்கிறது.
மேலும் பொன்னை உரசினாற் போல் மேனியுடைய தேமலானது உடலில் அதிகம் காணலாம். அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாக உடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகிய உடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும் வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடு கூடிய ஓர் பழ வாசனையை அறியலாம். உடல் அடையாளமாக சாதாரணமாகவே உழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும்
மற்றும் புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும், மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானது உறையும் இடமாதலால் தொண்டை மத்தியில் ஏதோ ஒன்று கட்டியாக ஒரு சிறு உருண்டையாக இருந்துகொண்டு எதையும் நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு உறுத்தல் ஏற்படும்.
Comments
Post a Comment