மூலாதார சக்தி
*மூலதார சக்தி*
தியானத்தில் பெறப்படும் சக்தியானது பல பிறவிகளாக மூலாதாரத்தை நோக்கி பயணித்து வருகிறது. புதிய சக்திகள் உருவாகும்போது கூட அது கீழ்நோக்கியே செல்கிறது.
அதனால் தான் தியானத்தின் மூலம் பெறப்படுகிற சக்தியானது முதலில் காமத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
இதுவரை நீ கண்டிராத புது உணர்வு உனக்குள் தோன்றுகிறது. காமம் அதிகமாக தூண்டப்படும்போது இது வரை உனக்கு தெரிந்த ஒரே வழி கீழே உள்ள சக்ரமான மூலதாரத்தின்மூலம் அதை தனிக்க முற்படுகிறாய்.
தியானத்தில் பெறப்படும் அபரிமாத சக்திகள் மூலாதாரம் எனும் காமச்சக்ரத்தை நோக்கியே செல்லும். இப்போது தான் நீ விழிப்போடு இருக்க வேண்டும்.அதோடு போராடக்கூடாது. விழிப்புடன் மட்டுமே இருந்தால் போதுமானது.
உன்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அங்கே ஏதும் நடக்கப்போவதில்லை. நீ ஒத்துழைக்கும் போது மட்டுமே அந்த சக்தியானது வீணாகும்.
நீ விழிப்போடு இருக்கும்போது அதற்கான உந்துதலில் ஈடுபடாதபோது மூலாதாரத்திலே சக்தி தடைப்பட்டு நிற்கும்.
அந்த தியான சக்தியானது அடக்கப்படுவதில்லை தடுக்கப்படுகிறது. மேலும் மேலும் சக்தி பெருகும்போது அதற்கான வழி அடைக்கப்பட்டிருக்கும் போது சக்தி தேக்கம் உண்டாகிறது.
நீ செய்வதெல்லாம் மனதையும் உடலையும் விழிப்பாக வைத்திருப்பது தான்.
தியான சக்தியானது பெருகும்போது மூலாதார சக்ரத்தில் சக்தி வெளியேற வழியற்று போய்விடுவதால் அதுமேல் நோக்கி பயணிக்க ஆரம்பிக்கிறது.
சக்தி பயணிக்க ஏதுவாக புதுவழி திறந்து கொள்கிறது. மூலாதார சக்தி மேல்நோக்கி பயணிக்க ஆரம்பித்தவுடன் உன் உடலில் புது கவர்ச்சி ஏற்பட ஆரம்பிக்கிறது.
உடலில் காந்த சக்தி உண்டாக ஆரம்பித்து புது தேஜஸ் உண்டாகிறது. அந்த கவர்ச்சி ஒழுக்கத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இந்த பயிற்சியின் வாயிலாக கவர்ச்சியற்றவன் கூட மிக கவர்ச்சியானவனாக மாறிவிடுகிறான். இது வரை பார்த்திராத மனிதர்கள் கூட உங்கள் மேல் ஈர்ப்பு கொள்கிறார்கள். எதிர்பாலினர் உங்கள் மேல் அன்பு செலுத்த ஆரம்பிக்கிறார்கள். இந்த ஒழுக்கமான உடலில் ஒருவித அதிர்வலைகள் உண்டாக ஆரம்பிக்கின்றன. இந்த சகஸ்ரார சக்தியின் மூலம் பலருக்கு நல்ல காரியங்களை உன்னால் செய்ய முடியும்.
ஏழாவது சக்திமையமான சகஸ்ராரம் எனும் பிரம்ம சக்ராவிலிருந்து அடுத்து நீ இந்த பிரபஞ்சத்தோடு எளிதில் கரைந்துவிடலாம்.
Comments
Post a Comment