மொட்டை போட்டுக் கொள்ளும் பழக்கம்

மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம்
எப்போது யாரால் துவங்கப்பட்டது ?
மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில் வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில்
அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன் உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .
அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள் நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன் என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.
குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன் என கர்ஜித்தான் அர்ஜுனன். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார்.
அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே , ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள் , அவனை சிரம் கொய்யாதே , பதிலாக சிகையை மழித்துவிடு , அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும் என்றார்.
அதற்காக அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான் . ஆக சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும். ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு.
நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு வெகு தூரம் வெளியே வந்து விட்ட (நாகரீக ?) மக்களாகிய நமக்கு , இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.
ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால் , மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால் அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.
கோவிலுக்காக சிகையை மழிப்பது என்பது, அந்த தெய்வத்தின் முன் நம் அகந்தையை அழித்து, தெய்வத்தின் மகிமையை பூஜிப்பதன் அடையாளமாகும்.
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை
போடுவது ஏன் தெரியுமா?
குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
கருவறையில் 10 மாதம் பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள்.
எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான். நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளன
ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு.
எனவே மொட்டையடித்துக் கொள்வோரை பார்த்து
கிண்டல் செய்வதை திருத்திக்கொள்வோம்.
Comments
Post a Comment