மனதிடம் பேசும் கலை.
மனதிடம் பேசும் கலை.
1. மனம் தான் ஆட்டம் காண்கிறது.
2. சில சமயம் ஏமாற்றத்தின் காரணமாக...
3. சில சமயம் மூடு அவுட் ஆகிறது.
4. சில சமயம் கவலைப்படுகிறது.
5. சில சமயம் பயப்படுகிறது.
இப்படி மனதின் மூலமாக ஆன்மீக ஆற்றலை இழந்து கொண்டே இருக்கிறோம். மனதிடம் பேசக்கூடிய கலையை கற்றுக் கொண்டால், எந்த சூழ்நிலையிலும் ஆடாமல் அசையாமல் இருக்க முடியும். எந்த ஒரு உறவு முறையில் தகராறு என்றாலும் உடனே நார்மலாக விட வேண்டும். எதிலும் டீப்பாக போகாதீர்கள்.
சில சமயம் உறவுகளில் கோபம் என்றால்,
1. பேசாமல் இருப்போம்....
2. சிலருக்கு சில மணி நேரங்கள்..
3. சிலருக்கு சில நாட்கள்...
4. சிலருக்கு சில வருடங்கள் ஓடிவிடும்.
ஆனால் மனதில் துக்கம்,கோபம் இருந்து கொண்டே இருக்கும்.
மனதை சமாதானப்படுத்த வேண்டும். மனதை குழந்தை போல கவனியுங்கள்...
மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அதுக்கு தேவை,
"தன்னை யாருமே புருஞ்சுக்க மாட்றாங்க...
என் கேள்விக்கு யாரும் சரியா பதில் சொல்ல மாட்றாங்க....." என்பது..
ஆத்மா தாயாக இருந்து மனதிடம் பேசுங்கள். அப்படி தாயாக இருந்து மனதிடம் பேசும் போது. மனம் வலிமையாக மாறி விடுகிறது. மனம் சக்திசாலி ஆகிறது. எந்த உறவாக இருந்தாலும் நாட்களை கடத்தாமல் உடனே பேசி விடுங்கள்.
பழிக்குப் பழி, என்று துக்கத்தை சுமக்காதீர்கள்.
மனதிடம் சொல்ல வேண்டும்...
"ஏ மனமே...
நீ எதையுமே நினைக்காமல் அவர்களிடம் சென்று பேசி விடு" என்று,
1. மனதின் கேள்வி...____?
நான் ஏன் பேச வேண்டும்.?
தவறு அவர்களிடம் தான் இருக்கிறது.
ஆத்மாவின் பதில்....____
"தவறு அவர்களிடம் இருந்தாலும் அகங்காரத்தை காட்டிலும்,
அந்த உறவு தான் முக்கியம் "
அதனால் நீ போய் பேசிவிடு.
2. மனதின் கேள்வி...____?
"எப்பவுமே நான் தான் போய் பேச வேண்டுமா...?
ஏன் அவர்கள் வந்து
பேசக்கூடாதா?"
என்று கேட்கும்.
ஆத்மாவின் பதில்...____
யார் முதலில் பேசுகிறார்களோ அவர்கள் தான் சக்திசாலிகள்...
அவர்கள் தான் பலசாலிகள்.
அதனால் நீ போய் பேசு.
3. மனதின் கேள்வி.....?
"நான் போய் பேசுனா என்னை ஏமாளி என சொல்லுவார்கள்."
ஆத்மாவின் பதில்...._____
"யார் மற்றவர்களை மன்னிக்கிறார்களோ.
"யார் மற்றவர்களின் தவறுகளை மறந்து அவர்களை ஏற்றுக்
கொள்கிறார்களோ,
அவர்கள் தான் உறுதியானவராக ஆனவர்கள்.
ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் இப்படி சொல்லும் போது ரொம்ப அன்பானவராக ஆகி விடுவீர்கள். அப்போது தைரியமாக மனம் அந்த உறவிடம் பேசி விடும்...
மனதிடம் இப்படி அடிக்கடி பேசும் போது, பல காரணங்களுக்கு நிவாரணம் கிடைத்து விடும்.
💛மனம் உங்கள் நண்பனாகி விடும்💛
"இது ஒரு கலை."
*🔥ஓம் சாந்தி🔥*
ராஜ யோக ஞானம் நம் மனதை பூந்தோட்டமாக ஆக்கி விடும்.
Comments
Post a Comment