இறப்பது என்பது?

இறப்பது என்பது என்ன...?

நாம் இறக்கும் பொழுது உடல் இறக்கிறது ...?

அப்பொழுது மனமும் இறக்கிறதா...?

ஆத்மாவும் இறக்கிறதா ...?

                                        இந்த கேள்விகளுக்கு சிறப்பான விளக்கம் ...


நன்கு படித்து உள் வாங்கிக் கொள்ளுங்கள் ...


இறப்பு என்பதன் அர்த்தம் உங்கள் உயிர்த் தன்மைக்கு ஓய்வு கொடுப்பது தான் ..

உங்கள் உயிர்த்தன்மைக்கு இறப்பு என்பதே கிடையாது .. 

அழிவே கிடையாது ..

இந்த பிறவியில் நீங்கள் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து விட்டீர்கள் .. ஆகவே உங்கள் உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது ...

இறப்பு உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கிறது ..

இந்த உலகத்தில் உடல் தோற்றுவிக்கப்படுகிறது பிறகு நீங்கள் உங்கள் மனதை தோற்றுவித்துக் கொள்கின்றீர்கள் ..

ஆனால் உங்கள் உயிர்த்தன்மை என்பது தோற்றுவிக்கப்படாதது ..அது எங்கும் எப்போதும் எதிலும் நிறைந்தது அதற்கு இறப்பும் இல்லை . பிறப்பும் இல்லை ..

ஆகவே இறப்பு என்பது உடலுக்கும் மனதுக்கும்தான் ..ஆனால் ஆன்மாவுக்கு அழிவு இல்லை ஆன்மா என்றால் என்ன...

மனதோடு அதாவது ஆசைகளோடு கலந்த உயிர்த்தன்மைதான் ஆன்மா என்பது !

ஆன்மா மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறந்து அதன் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறது ..

அப்பொழுதுதான் கலப்பட உயிர்த்தன்மை சுத்த ஆன்மாவாகி பிறவியை அறுக்கும் ..

இந்த சுத்த ஆன்மா மீண்டும் பிறக்க வேண்டிய தேவை இல்லை ..

அது பிரபஞ்ச உயிரத்தன்மையோடு கலந்து விடுகிறது ..


நான் அறிந்த பிறவியை அறுக்கும் சிறப்பான விளக்கம் ...



Comments

Popular posts from this blog

96 தத்துவங்கள்

திருமந்திரத்தில் உள்ள பாடல் விளக்க உரை

சூரிய கலை சந்திர கலை