கடவுளை அடையும் கலை


*காமத்திலிருந்து கடவுளுக்கு..*

*பொதுவாக தமிழர்களின் மனநிலை*

*காமத்தை பேசுவது தவறு. ஆனால் செய்வது சரி..*

*ஏன் இந்த முரண்பாடு !*

*பேசப்படாத ஒன்று எப்படி சரியாக செய்யப்படும்.*

*திருமணம் ஆகாத முதல் நாள் வரை*

*அந்த ஆணோ, பெண்ணோ செக்ஸ் பற்றி, வெளிப்படையாக பேசிக் கொண்டால் தவறென சொல்லும் சமூகம்தான்.*

*திருமணமாண அந்த முதல் இரவு அதே ஆண் பெண்ணை ஊர் கூடி உறவு முதல் இரவுக்கு, முதல் செக்ஸ்க்கு போகச்சொல்லும்.*

*அந்த முதல் இரவில் அந்த ஆணுக்கு அந்த பெண்ணின் உடலை மட்டுமே திறக்க தெரியும்*.

*அவளின் உணர்வை எப்படி திறக்க தெரியும்.*

*அவளின் உணர்வை திறக்ககாத வரை*

*அந்த இன்பத்தை அவள் உயிர் (ஆத்மா ) எப்படி அனுபவிக்கும்.*

*பெண்ணின் உயிர் ஆழம்வரை*

*ஒரு ஆண் இன்பம் தராதவரை*

*அது பெண்ணிற்கான விடுதலை அல்ல..*

*வெறும் யோனி ஆழம் வரை சென்று*

*தன் ஆசையை தீர்த்து கொள்பவன்*

*நல்ல ஆம்பளையே அல்ல..*

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

*இன்னும்...* *இன்னும்..*

*பெண் விடுதலை*

*மன விடுதலை*

*எண்ணங்களின் விடுதலை*

*நம்மையே நம்மில்* *இருந்து*

*விடுவிக்கும்* *விடுதலை......என*

*மனித விடுதலைக்கான*

*மகா சக்தி*!

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

ஆழமான உச்சகட்டமென்பது, காதலின் வெளிப்புற அடுக்காகும்...

இன்னும் ஆழமாக மாறும்போது... பிரார்த்தனையாக மாறும்.

மிக ஆழமான அனுபவம் என்பது கடவுள்தன்மையாகும்...!

விழிப்புணர்வடைந்த காமமும், உன்னுடைய இருப்பு, பிரபஞ்ச இருப்போடு இணைவதையும் தான் தந்தரா என்கிறோம்.


*காமத்திலிருந்து கடவுளுக்கு..*

*காமத்தின் பாதையில் கடவுள் அடைய முடியுமா ?*

*முடியும் என்கிறார் தாந்திரிக் குரு*

*பொதுவாக இன்றைய உலகம் Fast food உலகம்*

*எதையும் நின்று நிதானித்து அனுபவிப்பதில்லை, குடிப்பதில்லை, உண்பதில்லை*

*கடவுளையும் fast ஆக அடையணும் என்று  பார்க்கிறார்கள்*

*மந்திரம் ஜெபிக்க நேரமில்லை, பூஜை செய்வது பழக்கமில்லை என..*

*கடவுளை கை எடுத்து கும்பிடுவதோடு கடவுளுக்கும் தனக்குமான தொடர்பு முடிந்தது என இருக்கிறார்கள்*

*இப்படி இருப்பவனை கடவுளை  அடைய வா என்றால் வர மாட்டான்*


*பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் பிடித்தது.* *காமம்*

*மனிதர்களை  காமத்தின் ருசியிலே கடவுளை அடைய வைக்கும் வித்தையே தாந்திரிக் கலை*


*என்ன கற்று தர போகிறார் என எள்ளி நகையாடி விடாதீர்....*

*என்ன சொல்லி தரப்போகிறார் என சூட்சுமம் தெரியாமல் பேசிவிடாதீர்...*

*என்றைக்காவது குடிக்கும் தண்ணீரை பார்த்து  குடித்து உள்ளீரா ?*

*என்றைக்காவது உண்ணும் உணவை உள்ளார்ந்து பார்த்து அதன் சுவையை புரிந்துள்ளீரா?*

*டிவி பார்த்து கொண்டு, மொபைல் பார்த்து கொண்டேதான்..*

*நாம்  உண்பதை, குடிப்பதை பழக்கமாக்கி வைத்திருக்கோம்*

*அதனால்தான் நமக்கு அது உணவு குப்பையாக மட்டுமே உடம்பில் சேர்கிறது* 

*ஆரோக்கியம் தருவதில்லை* *ரசிக்கப்படாத* *ருசிக்கப்படாத* *உள்ளத்தால்*

*உணர்வால்* *உள் வாங்கப்பட்டு* *அனுபவிக்காத எதுவுமே வியாதிதான்*

*அப்படித்தான் நீ காமத்தையும் வியாதியாக்கி வைத்திருக்கிறாய்*

*உன் உடற் சூட்டிற்கும்* *உணர்வுக்குமான*

 *வியாதிக்குத்தான் காமத்தை பயன்படுத்தி மருந்து போட்டுக் கொள்கிறாய்*


*காமத்தின் புனிதம் தெரிவாயா?*

*காமத்தின் புனிதம் கடவுளையே காட்டும் சக்தி உண்டென நீ அறிவாயா?*

*என்றைக்காவது உன் துணையை முகம் ரசித்த பின்  நீ முத்தமிட்டுள்ளாயா?*

*அவள் அழகை காதல் கண் கொண்டு பார்த்து ரசித்தபின் காமம் கொண்டுள்ளாயா ?*

*பிழியபட்டு தரும் கரும்புச் சாரு குடித்து வளர்வதால் கரும்பை கடித்து, இழுத்து, சுவைத்து, சப்பி தின்னும் அனுபவத்தை இழக்கிறாய் தெரியுமா ?*

*உன் காமத்தை கொட்டும்  புதை குழி அல்ல பெண்*

*உனக்கு கடவுளையே காட்டும் வரமடா அவள்*

*உன் ஆவேச  காமத்தில்..*

*அவசரத்தில் ஆடை களைந்து*

*அருவருப்பாய் எச்சில் பரப்பி , ஆலிங்கன எழுச்சி  தீர்ப்பதல்ல காமம்*

*முதலில் உன் துணையை  கண் விழித்து பார்*

*கரம்பிடித்து காதல் பேசு*

*கால் அழுத்தி கதை பேசு*

*முழுதாய் அவளை உள்வாங்கு*

*கண்ணால் அவளை ரசி. பின் ருசி. பின் உன் கை காலை பயன்படுத்து*

*உன் இலக்கெல்லாம்*

*அவள் உறுப்பு மட்டுமே என* 

*இருக்கும்வரை நீ சிவனாக முடியாது*

*நீ  சிவனாவது எப்படி ?*

*அவளை சக்தியாய் உணர்வது எப்படி ?*

*சிவனாய் சக்தியாய்*

*கலந்து ஆரோக்கிய* 

*குழந்தை பெற்றெடுப்பது எப்படி?*


*வா..மனிதா  வா..*

*உம்மை புனிதனாக்கி  காமத்திலிருத்து கடவுளுக்கு அழைத்து செல்லும் கலையை கற்க வா..*

*தந்த்ரா*.....*இது வார்த்தை அல்ல.வாழ்க்கை*......

தந்திரா யோக பயணத்தில் தன் இல்லற தாம்பத்ய  வாழ்வு சரியாவதோடு மட்டுமல்லாமல், உடல்  உபாதையால் ஏற்பட்ட  கோளாறுகளையும் சரி செய்யும் கலை.

*உன் உள்ளம் மாறும்*

*உன் எண்ணம் மாறும்*

*உன் காதல் மாறும்.*

*உன் காமம் மாறும்*

*இது அத்தனையும் மாறினால் உனக்கு கடவுள் தன்மை கை கூடும்*

💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜


*தந்திரா என்றால் என்ன ?* 

தந்திரா என்பது பெண் இன்பத்திலிருந்து விடுதலை அடைவதற்கு வழிகாட்டுதல் ஆகும். காமத்திலிருந்து விடுதலையாவதற்கு, இதைத்தவிர வேறு மார்க்கம் கிடையாது. மற்ற எல்லா முறைகளும் அதை (காமத்தை) ஆதரிக்கவே செய்யும்.

காமத்தை விஷத்தன்மையாக்கியது நமது முட்டாள் மதங்கள்தான். காமத்தின் வழியாக சக்தி வெளியேறுதலை மிகக் கவனமாக ஒரு சாட்சித்தன்மையுடன் பார்ப்பதன் மூலமே அதை மறையச் செய்ய முடியும். அல்லது அதைக் கடந்து செல்லலாம். அதை அடக்குதல் மூலமாக உங்களால் அதை ஒருக்காலும் வெற்றி கொள்ள முடியாது. இதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொண்டு, அத்துடன் சற்று இயைந்து செல்ல வேண்டும். 

நீங்கள் ஒரு ஆற்றைக் கடக்க என்ன செய்வீர்கள்? ஆற்றின் ஓட்டத்திலேயே சென்று, மெல்ல மெல்ல அடுத்த கரையை நோக்கி வேகமாக சற்று பக்கவாட்டில் செல்வீர்கள் அல்லவா? அப்பொழுதுதான் உங்களால் அடுத்த கரையை அடைய முடியும். அதைப்போலத்தான் காமத்தின் போக்கிலேயே சற்று சென்று, பிறகு மெல்ல மெல்ல அதைப் புரிந்துகொண்டு, ஒரு சாட்சியாக நின்று அந்த உணர்வைப் பார்க்கவேண்டும்.

ஆனால், நீங்கள் நினைப்பதுபோல, காம உணர்வை சாட்சியாக நின்று பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல! ஆரம்பத்தில் அந்த விந்து சக்தி விரைவில் வெளியாகிவிடும்! பொறுமையாக மீண்டும் மீண்டும் முயலவேண்டும். இதற்கு உங்கள் காதலியோ அல்லது மனைவியோ மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது நடக்கக்கூடிய காரியம் இல்லை. பல முயற்சிகளுக்குப் பிறகுதான், இது சாத்தியமாகும். ஆற்றைக் கடப்பது அவ்வளவு எளிதல்ல! 


அடுத்து பாலுணர்வு சக்தியை எப்படி சமாதி நிலைக்கு மாற்றுவது என்பது பற்றி பார்ப்போம்.

நுண்ணிய தன்மையில் இயங்கும் மனதின் இயக்கத்தைத் தந்திராவும் யோகாவும் ஏழுவகையாகப் பிரிக்கின்றன. இது ஒரு ஏழு நிலைகள்தான். இதற்கும் உங்கள் உடல் மற்றும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மனிதனின் உள்ளுணர்வு இயக்கத்தைப் புரிந்துகொள்ள, இந்தக் கற்பனையான மையங்கள் உதவியாக இருக்கும். இதை ஏழு சக்கரம் என்று கூறுவர்.

இந்த ஏழுக்குள் அடிப்படையாக உள்ளது 'மூலாதாரம்' என்பது. மூலாதாரம் என்றால் அடிப்படையானது அல்லது ஆதாரமானது என்று அர்த்தம். இதில்தான் உங்கள் பாலியல் சக்தி அடங்கியிருக்கிறது. இது முக்கோண வடிவத்தில் அமைந்திருக்கிறது. இந்த முக்கோணத்தில் ஒரு பக்கம் சிறுநீர் வாய், அடுத்தபக்கம் மலக்குழி, மூன்றாவது உடலுறவு வழி.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையை இந்த உடலுறவு வழியாகவே ஆரம்பிக்கிறது. பெரும்பாலோர் இந்தச் சக்கரத்திலேயே நின்றுவிடுகிறார்கள். இதனால் இங்கு எந்த மாற்றமும் நிகழாமல் போய்விடுகிறது. ஏனென்றால் எல்லா பழைய மதங்களும் ஆண் பெண் உறவை பாபம் என்று கண்டித்தே வந்திருக்கின்றன. இதில் முதலிடம் வகிப்பது கிறிஸ்துவம்தான். ஆனால் தந்திரா, மனிதன் இந்தக் கட்டுப்பாட்டிலிருந்தும், தவறான அணுகுமுறையிலிருந்தும் முதலில் விடுதலை அடைய வேண்டும் என்று கூறுகிறது. இந்த உடலுறவு வாயிலில் இருந்து ஒருவன் விடுதலை அடைய கத்தவேண்டும், கதறவேண்டும், சிரிக்கவேண்டும், அழ வேண்டும், செரும வேண்டும். இது பைத்தியக்காரத்தன்மை போலத் தோன்றும். ஆனால் உங்களுடைய பைத்தியக்காரத்தனமான அடக்குமுறையிலிருந்து விடுதலை அடைய வேறு வழியில்லை. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த அடிப்படை சக்தி தேக்கத்தில் ( அடைப்பு ) ஒரு மாற்றத்தை உண்டுபண்ண முடியும்.

அப்பொழுதுதான் இந்த அடிப்படை சக்தி தேக்கத்தில் ( அடக்கி வைக்கப்பட்ட ) அல்லது (அடைபட்ட ) ஒரு மாற்றத்தை உண்டுபண்ண முடியும் .......

அதைப்போல சூதத்தில் ( குதம் ) மையம் கொண்டிருந்த பாலுணர்வை பிராணாயாமம் ( முறையான மூச்சு ), ' பஸ்திரிக்கா ' ( Bastrica ) - ( முறையற்று மூச்சு விடுதல் ) போன்றவற்றால் வெளியே தள்ளவேண்டும். இப்படியாக அதன் இறுக்கத்தைக் குறைக்க வேண்டும். 

அடுத்து , எல்லா பழைய மதங்களும் , முக்கியமாக ஹிந்து மதம் , விந்து சக்தியை ஒரு மிகப்பெரிய சக்தி என்று கருதுகிறது . இது மிகவும் முட்டாள்தனமானது. நான் சக்தி இழப்பு என்று கூறுவது இந்த விந்துவை அல்ல! உங்கள் காம எண்ணங்களிலும் உடலுறவு முன்விளையாட்டுக்களாலும் ஏற்படும் சக்தி செலவைத்தான் குறிப்பிடுகிறேன். இது கிட்டத்தட்ட ஒரு உடல் பயிற்சி போலத்தான் .

நீங்கள் உங்கள் விந்தை இழப்பதால் எந்த சக்தியையும் இழப்பதில்லை. அது தன் இயல்பாக, உங்கள் உடலில் சுரந்துகொண்டே இருக்கிறது. அது எப்படியும் வெளியே வரத்தான் வேண்டும். பாலுணர்வு என்பது மிகவும் அழகானது, ஆரோக்கியமானது, அவசியமானது. ஆனால் நீங்கள் அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதைக் கடந்துசெல்ல முயற்ச்சிக்க வேண்டும். இது ஆரம்பம்தான். இதன் முடிவு சமாதி நிலைதான் ! அதாவது அந்தப் பேரின்பத்தை அடைய இந்த சிற்றின்பத்தை கையாளுங்கள் ! அதற்கு அத்துடன் விழிப்புணர்வோடு ஒத்து செல்லவேண்டும். இப்படியாக நீங்கள் உங்கள் மூலாதார சக்கரத்திலிருந்து விடுதலை அடைய வேண்டும். அது 100 சதவிகிதம் எந்தவித இறுக்கமும் இல்லாமல் செயல்பட வேண்டும் . 

அடுத்தது இரண்டாவது சக்கரம் ' சுவாதிஸ்தான் ' ( Swadhisdhan ) என்பதாகும் . இதை ஹரா அல்லது இறப்பு மையம் என்று அழைப்பர் . இதையும் மக்கள் கெடுத்து வைத்திருக்கிறார்கள் . ஏனென்றால் இறப்பைக் கண்டு மனிதன் பயப்படுகிறான். 

தந்திரா , ' பாலுணர்வைத் தடுக்காதீர்கள் . இறப்பையும் தவிர்க்காதீர்கள் ! ' என்று கூறுகிறது. அதற்கு ஒரே வழி அவற்றைப் புரிந்துகொண்டு, அத்துடன் ஒத்துப்போக வேண்டும். பயந்து, வெறுத்து ஒதுக்கக்கூடாது.

முதலில் இந்த இரண்டு மையங்களும், தன் இயல்பு நிலைக்கு வந்துவிட்டால், அடுத்து ஐந்து நிலைகளைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை . 

முடிவாக தந்திரா, ' நீங்கள் காதல் செய்யும்பொழுதும், தியானத்தன்மையோடு ஈடுபடுங்கள். யாராவது இறந்துகொண்டிருந்தால், நீங்கள் தியானத்தில் மூழ்குங்கள். அந்த இறப்பை உங்கள் தியானமாக்குங்கள். அவருடைய இறப்பில் நீங்களும் பங்குகொள்ளுங்கள். அப்பொழுது அந்த இறப்பின் உணர்வை நீங்களும் அடைவீர்கள். இப்படி இறப்பை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். இறக்கும் மனிதன் ஒருவன் தன் சக்தியை, சுவாதிஸ்தான் மூலமாக வெளியேற்றுகிறான். 

அதைப்போல நீங்கள் கலவியில் ஈடுபடும்பொழுது, தியானத்தன்மையோடு இருங்கள். அப்பொழுது நீங்கள் ஒரு சில கணங்கள் சமாதிநிலையை அடைவீர்கள் ...

                        *தந்திரத்தின் புனிதம் கடவுளையே உணரும் சக்தி *

Comments

Popular posts from this blog

96 தத்துவங்கள்

திருமந்திரத்தில் உள்ள பாடல் விளக்க உரை

சூரிய கலை சந்திர கலை