பகவத் கீதையின் சாரம்
*கீதையின் சாரம்*
*ஸ்ரீமத் பகவத் கீதையில் 700-சுலோகங்களும், 18-அத்தியாயங்களும் உள்ளன !*
1-ம் அத்தியாயம்: அர்ஜுனனின் கேள்விகள், அதாவது மனிதப் பிரச்சனைகள் பற்றியது.
2-ம் அத்தியாயம்: முக்கிய சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பற்றியது.
3- முதல் 17-வரை: தீர்வுகளின் விஸ்தாரம் பற்றியது.
18-ம் அத்தியாயம்: இவற்றின் சாராம்சம் பற்றியது.
இவ்வாறாக இன்று நம் முன் ஸ்ரீமத் பகவத் கீதையின் 18-அத்தியாயங்களும் உள்ளன. உண்மையில் எவ்வாறு காண்பித்துள்ளனர் -அர்ஜூனன் மற்றும் பகவானுக்குமிடையே நடந்த சம்பாஷணை (உரையாடல்) என.
நாம் சற்று முன் பார்த்தோம் நாம் அனைவருமே அர்ஜூனர்கள் என. எனவே இது நமக்கும் பரமாத்மாவிற்கும் இடையே நடைபெறும் சம்பாஷணை ஆகும்.
*கீதா ஞானம் !*
இந்த கீதா ஞானம் பரமாத்மாவுடனான நமது உரையாடல் !
நாம் இந்த உலகையே மிக அதிக சிக்கல் மற்றும் குற்றம் குறையுள்ளதாக்கி விட்டோம் !
நாம் இதை வாழத் தகுதியான ஓர் இனிய உலகமாக உருவாக்க முடியும் !
ஒவ்வொருவரும் தனக்காக இதை உறுதி செய்யுங்கள் -நான் எங்கே செல்ல விரும்புகிறேன்? எனது அந்த லக்ஷியத்தை எவ்வாறு அடைய முடியும் என!
Comments
Post a Comment