விபூதி குங்குமம்

 அறிஞர்களின் ஆராய்ச்சி

ஆராய்ச்சி - 1


விபூதி குங்குமம் :

இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். 

இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். 

சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது.

மீனாட்சி அம்மன் சன்னதியில் அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். ,  

இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார்... இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார்.


ஆராய்ச்சி - 2


மந்திரங்கள் :

வேதங்கள் மந்திரசக்திகளை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறது. மந நாத் த்ராயதே இதி மந்த்ர என்று வடமொழி ஸ்லோகம் ஒன்று உண்டு. இதற்கு அர்த்தம் மனனம் செய்தால் காப்பாற்றுவது என்பது. மந்திரம் உச்சரிக்கும் போது நமது உடலில் 72 ஆயிரம் நாடிகளில் சலனம் ஏற்படுகிறது. மந்திரத்துக்கு காக்கும் சக்தி உண்டா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்லவேண்டும். பொதுவாகவே சத்தத்துக்கு பொருள்களை அதிர வைக்கவும், இயங்க வைக்கவும் ஆற்றல் உண்டு. 

மனிதனின் உடலில் உயிர் என்ற நாதம் சத்தம் மூலாதாரத்தில் உடலில் நடுப்பகுதியில் அமர்ந்து உடல் முழு வதும் அதிர்வலைகளாக துடிப்புகளாக பரவுகிறது.

மந்திரங்களை ஒருமுகத்தோடு உச்சரிக்கும் போது மனம் ஒருமுகமாகிறது. 

மனத்தில் இருக்கும் குழப்பத்தை அமைதிப்படுத்துகிறது. உலகில் உள்ள அனைத்து மதங்களிலும் மந்திரங்களை உச்சரிப்பது உண்டு. மந்திரங்கள் மனிதனின் சக்தியை வெளிக்கொண்டுவரும் திறன் பெற்றது. மனிதர்களை மேன்மை படுத்துகிறது. உயர்ந்த மனிதனாக மாற்றுகிறது.

கீதையில் கிருஷ்ண பரமாத்மா உனக்கு நீயே நண்பன், உனக்கு நீயே விரோதி என்று கூறுவார். அதாவது அவனவன் பிரச்னைக்கான தீர்வு அவனிடமே உண்டு. 

ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்குரிய தனி மந்திரத்தை அமிர்த தாரா மஹா மந்திரத்தைக் கொடுத்துவிட்டால் அவன் எந்த பரிகாரத்துக்கும் வேறு எங்கும் செல்லவேண்டியதில்லை.

டாக்டர். ஹாவர்ட் ஸ்டீங்கிங்கில் என்னும் அமெரிக்க ஆராய்ச்சியாளர் உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மந்திரங்கள், பாடல்கள் போன்றவற்றை சேகரித்து அவற்றின் சிறப்பு மற்றும் சக்தி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். 

அவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் நமது காயத்ரி மந்திரமானது நொடிக்கு 110,000 ஒலி அலைகளை ஏற்படுத்தியது. இந்த எண்ணிக்கையானது மற்ற எந்த மந்திரத்தை காட்டிலும் மிகவும் அதிகமானதாக கருதப்படுகிறது. 

இந்த ஆய்வின் முடிவில் காயத்ரி மந்திரம்தான் உலகின் சக்திவாய்ந்த மந்திரம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த முடிவை அடுத்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹாம்பர்க் பல்கலைக்கழகம் காயத்ரி மந்திரத்தை பயன்படுத்தி உடல்ரீதியான மற்றும் மனரீதியான உருவாக்கத்தை எப்படி அதிகரிப்பது என்றும் எப்படி பயன்படுத்துவது என்றும் ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்தது.

ஆராச்சியை தொடங்கும் பொருட்டு தென் அமெரிக்கா, சூரினாம், ஆர்ம்ஸ்டெர்டாம், ஹாலந்து போன்ற மாகாணங்களில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மாலை 7 மணி முதல் 15 நிமிடத்திற்கு காயத்ரி மந்திரத்தை ஒலிபரப்பினார்கள்.

இரண்டு ஆண்டு நடத்தப்பட்ட இந்த ஆராய்ச்சியின் முடிவில் காயத்ரி மந்திரத்தை கேட்கும்போது ட்ரில்லியன் கணக்கிலான நியூரான்கள் விழித்து கொள்வது கண்டறியப்பட்டது. 

இது தொடர்ச்சியாக நடக்கும்போது மனிதர்களின் மூளையின் செயல்திறன் இருமடங்காவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

காயத்ரி மந்திரமானது விஞ்ஞான பூர்வமானது. இது உலகளாவிய ஒலி மற்றும் அதிர்வெண் விதிகளுக்கு உட்பட்ட மந்திரமாகும். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது ஏற்படும் ஒலி அலைகள் அனைத்து மனிதர்களின் மீதும் வெப்பம் மற்றும் குளிர் விளைவுகளை உருவாக்குகிறது, இதனால் உடனடியான பலன்களை உணரலாம். இந்த மந்திரத்தின் மூலம் ஆராவில் ஏற்படும் மாற்றம் நம்மை சுற்றி இருக்கும் அனைத்து தீயசக்திகளையும் விரட்டும். இதன்மூலம் நம்முடைய ஆராவின் அன்பு , ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற குணங்கள் பலப்படும்.



காயத்திரி மந்திரம் எனப்படுவது ‘சாவித்திரி மந்திரம்’ என கூறப்படுகிறது.

காயத்திரி மந்திரத்தை நமக்கு தந்தவர் விசுவாமித்திர மகரிஷி.


Comments

Popular posts from this blog

96 தத்துவங்கள்

திருமந்திரத்தில் உள்ள பாடல் விளக்க உரை

சூரிய கலை சந்திர கலை