உள்ளொளி தியானம்
சூரிய உதய தியானம்...
மிகவும் எளிமையான தியானம்.
வானில் கடைசி நட்சத்திரம் மறையும் நேரம். இது ஒரு அற்புதமான கணம் என்று ஓஷோ கூறுகிறார். புத்தரும் தன் சொற்பொழிவில் அடிக்கடி குறிப்பிடுவார்.
ஆன்மீகத்திலும் இது புனிதமான கணங்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் குறிப்பிடுவார்கள்.
கடைசி நட்சத்திரம் மறைவிற்கு பிறகு வானில் மாபெரும் வர்ண கோலம் அரங்கேற்றம்.
சிவப்பும், ஆரஞ்சும், மஞ்சளும் கலந்து அற்புதமாக வானம் தன் இருள் உடையை களையும் நேரம்..
தக தக வென்று சூரியன் தன் பொற் கதிர்களை வீசிக் கொண்டு ஒரு பெரிய சிவப்பு ஆரஞ்சு பந்து போல மெல்ல எழும் நேரம்.
வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அற்புதமான தருணங்கள்.
எங்கும் அமைதி. பறவைகளின் ஒலி. இயற்கையோடு இயற்கையாக நம்மை தொலைக்கும் கணங்கள்.
அத்தருணத்தில் ஹராமையத்தில் உங்கள் இடது கையை வைத்து, சூரியனின் அற்புத அலைக்கதிர்கள் ஹராமையத்தில் பாய்வதை உணருங்கள். ஹராமையத்தில் சூரியன் இப்போது. உணர்தல் முக்கியம்.
அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில்
பிண்டத்தில் இருப்பதே அண்டத்தில்...
பஞ்ச பூதங்களின் கலவையே இந்த உடல்.
ஐந்து நிமிடங்கள். சூரியன்... உங்கள் ஹராமையம். எண்ணம் வேறெங்கும் சிதறாமல்.... தியானம்
மிக எளிமையான விழிப்புணர்வு தியானம்.
ஒருமுகப்படுத்தினால் இந்த தியானம் நல்ல விழிப்புணர்வு பயிற்சி.
உங்கள் உள்ளொளி பெருகும்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் Just ஐந்து நிமிடங்கள்.
அதிகாலை சூரிய உதயத்தை பார்க்க வேண்டும். அவ்வளவுதான்.
நம்முள் என்ன மாற்றம் என்பதை நாமே உணரலாம்.
ஹராமையம்
ஹராமையம் பற்றி புரிதல்!...
சிறு வயது முதல் புதிய அனுபவங்களை எதிர் கொள்ளும் போதும், ஊஞ்சலாடும் போது, நீச்சல் கற்றுக் கொள்ளும் போதும், பொதுவாகவே புதிய சூழ்நிலைகளை எதிர் கொள்ளும்போதும், Stage performance ன் போதும், சிறந்த மாணவனாகப் பாரட்டப்படும் போதும், பரிசுகள் பெறும் போதும், முதற்காதல் அனுபவத்தின் போதும் அடிவயிற்றில் ஒரு இனந்தெரியாத ஒரு உணர்தல் இருந்து கொண்டே இருக்கும்....
வயது ஏற ஏற மறந்து மரத்து விட்டது.
ஆங்கிலத்தில் இதை Gut feeling, Guts என்பார்கள்...
Comments
Post a Comment